என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அப்துல் கரீம் தெல்கி
நீங்கள் தேடியது "அப்துல் கரீம் தெல்கி"
20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் இருந்து காலம்சென்ற அப்துல் கரீம் தெல்கியை விடுதலை செய்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Telgi #Stamppaperscam
மும்பை:
நாட்டையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முத்திரைத்தாள் மோசடி வழக்கில் மூளையாக இருந்ததாக கடந்த 2001-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி. இவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும் 202 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
பரப்பன அக்ரஹார சிறையில் அப்துல் கரீம் தெல்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சிறையில் இருந்த அப்துல் கரீம் தெல்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் அங்கு சிகிச்சை பெற்றுவந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் 26-10-2017 அன்று மரணம் அடைந்தார்.
இவ்வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக தெல்கி சார்பில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக தண்டிக்கப்பட்ட அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரை விடுவித்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Telgi #Stamppaperscam

இதையடுத்து, புனே நகரில் உள்ள எர்ரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு மாற்றப்பட்ட தெல்கி 11 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தார்.
பரப்பன அக்ரஹார சிறையில் அப்துல் கரீம் தெல்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சிறையில் இருந்த அப்துல் கரீம் தெல்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் அங்கு சிகிச்சை பெற்றுவந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் 26-10-2017 அன்று மரணம் அடைந்தார்.
இவ்வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக தெல்கி சார்பில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக தண்டிக்கப்பட்ட அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்டோரை விடுவித்து நாக்பூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Telgi #Stamppaperscam
×

X